பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ் பல்கலைக்கழகத்திலும் முன்னெடுப்பு!

Monday, October 11th, 2021

நாட்டில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று 11 ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேநேரம், நாள்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று(11) நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நெறிப்படுத்தலில் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சினோபாம் தடுப்பூசி ஏற்றல் முன்னெடுக்கப்படுகிறது. இன்று 11 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தினமும் முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 1.00 பல்கலைக்கழக சுகநல நிலையத்தில் தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: