பல்கலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு சிவில் உடையில் பொலிஸார்!

Tuesday, July 26th, 2016

யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்காக சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என யாழ் பிராந்திய பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எவ்வித பாதுகாப்புப் பிரச்சினையும் ஏற்படக்கூடிய சாத்தியமில்லை. கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு எவ்வித தடையும் கிடையாது. பூரண பாதுகாப்பினை பொலிஸார் வழங்குவதனால் அச்சமின்றி சிங்கள மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் என தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Related posts: