பல்கலை தாக்குதலுக்கு கண்டனம்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் சுதந்திரமாக கல்வி கற்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என, அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.
அப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வவுனியா கிளையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், அப் பகுதியின் பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Related posts:
கடன் சுமையை குறைக்க மேற்கு நாடுகள் உறுதி!
சிறைக்கைதிகளில் உள்ள உறவுகளுடன் பேச விசேட திட்டம் - இராஜாங்க அமைச்சர் லொஹான் தெரிவிப்பு!
அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரி ஒருவரை நியமியுங்கள் - பிரதானிகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத...
|
|