பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Wednesday, July 13th, 2016

அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபா கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொடுப்பனவு, அரச சேவையில் உள்வாங்கப்பட்ட போதிலும் இதுவரை பல்கலைக்கழக கட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை என குழுவின் பொருளாளர் கே.எல்டி.பி.ஜீ. ரிச்மன்ட் கூறியுள்ளார். இதனையடுத்து 14 பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ் எம் குணரத்ன ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவை பல்கலைக்கழக கட்டமைப்பில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சம்பள ஆணைக்குழுவினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related posts: