பல்கலை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த வாரம் தீர்வு – உயர்கல்வி அமைச்சின் செயலாளர் !

Monday, September 30th, 2019

பல்கலைக்கழக தொழில்சார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த வாரம் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை ஆவணம் நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது. 

ஜனாதிபதி நியமித்த துணைக்குழு பல்கலைக்கழக கல்வி சேவைப் பிரச்சினை தொடர்பான தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை  ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இதற்கமைய, செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரச்சினைகளுக்குத் நியாயமான தீர்வு கிடைக்கும் என்று உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Related posts: