பல்கலை. இறுதி வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் ஜூன் 22 இல் ஆரம்பம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதி வருட மாணவர்களின் பரீட்சைகள் எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 15 ஆம் திகதிவரை இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்பின்னர் ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்புக்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மறுஅறிவித்தல் வரை பல்கலைகழக வளாகத்திற்குள் ஒன்று கூடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு பயிற்சிகள் என்பவற்றினை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
கணக்காய்வாளர் நாயகம் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!
இரண்டு மாதங்களில் ஊடக ஆணைக்குழு சட்டமூலம்!
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
|
|