பல்கலை அனுமதி விண்ணப்பம் 2 ஆயிரத்தால் வீழ்ச்சி கண்டது!

Tuesday, February 12th, 2019

புதிய கல்வியாண்டுக்காக 2018/2019 பல்கலைக்கழக பிரவேசத்துக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை ஒரு வாரத்தினால் நீடிக்கப்பட்டும் கூட கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் பிரவேசத்துக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தினால் குறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 78900 எனவும் இவ் வருடம் 77 ஆயிரத்தையும் தாண்டாத வகையிலேயே விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்ணப்பிக்கும் வழிமுறை ழுn டுiநெ மூலம் காணப்படுவதனால் அதில் உள்ள சிக்கல் தன்மையினால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த பல வருடங்களையும் நோக்கும்போது விண்ணப்பிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ள நிலையில் இம்முறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts: