பல்கலையின் அனைத்து கல்விசாரா ஊழியர்களும் இன்று கொழும்பிற்கு!

Tuesday, March 6th, 2018

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுதெரிவித்துள்ளது.

அனைத்து ஊழியர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் எட்வட்மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

கடந்த 7 நாட்களாக 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை இப்போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பல்கலைகழக நிறைவேற்று தர அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: