பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்!

Friday, January 10th, 2020



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரியல் இராசயனத் துறையின் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த பதவிக்காலத்தில் தமிழ் உறுப்பினராக பேராசிரியர் குமாரவடிவேல் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: