பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியான மோட்டார் சைக்கிள் விபத்து; யாழில் சோகம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு அதிவேகமாக சென்றுகொண்டிருந்த போது குளப்பிட்டி பகுதியில் உள்ள வீதியின் மதிலுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
Related posts:
|
|