பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி – பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
Friday, November 6th, 2020பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
அதனடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நாற்பத்து ஓராயிரம் மாணவ மாணவியருக்கும் கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரையில் கடன் வழங்கப்பட உள்ளதாகவும் இதன் ஊடாக மடிக்கணனி கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர் பட்டம் பெற்றுக்கொள்ளும் வரையில் மடிக்கணனிக்கான கடன் தொகையை செலுத்த தேவையில்லை எனவும் கற்கும் காலத்தில் மாதாந்த வட்டியைத் தொகையை மட்டுமே செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அரச வங்கியொன்றுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மிகக் குறைந்த வட்டி வீத அடிப்படையில் மடிக் கணனிகள் வழங்கப்பட உள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஓர் நிறுவனத்தில் மடிக் கணனிகளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|