பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறைமையின் கீழ் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக் கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கல்விமுறை முழுவதையும் தற்காலத்தின் தேவைக்கு ஏற்றவகையில் டிஜிட்டல் மயமாக்குவதற்கான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக மக்கள் வங்கியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மக்கள் வங்கி ரூ. 03 பில்லியனை ஒதுக்கியுள்ளது.
அதனடிப்படையில் இணைய இணைப்பு, மென்பொருள் பொதி மற்றும் 4 வருட உத்தரவாதத்துடன் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. ஒரு கணினியின் பெறுமதி 80,000 ரூபாவாகும்.
தொழிலொன்று கிடைத்த பின்னர் 06 ஆண்டுகளில் மொத்த பெறுமதியை திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் கடன்கள் வழங்கப்படுகின்றதுடன் மாணவராக இருக்கும் காலத்தில் மாதாந்தம் செலுத்த வேண்டிய தொகை 500 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நுழைவைப் பெறும் ஆறு புதிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் அதற்கான கடிதங்களை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|