பல்கலைக்கழக மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை – யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்!

Monday, March 13th, 2017

யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், மறு அறிவித்தல் வரை குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக வாளாகத்திற்குள் பிரவேசிக்ககூடாது எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

Related posts: