பல்கலைக்கழக நடவடிக்கைகளை நவம்பரிற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021

மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பல்கலைக்கழகங்கள் அனைத்தும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுநேரம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2020 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

போலித் தேசியவாதிகளால் தமிழினம் வாழ்வியலில் மீட்சிபெற முடியா திருக்கின்றது - ஈ.பி.டி.பியின் காரைநகர் ...
கொரோனாவை முழுமையாக ஒழிப்பேன்- அரசியல் இனம் மதம் என்ற பேதங்கள் கிடையாது - பிரதமர் மஹிந்த விசேட உர...
அம்பாறையில் கறுப்பு பூஞ்சை தொற்று தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - விசேட வைத்தியர் உப...