பல்கலைக்கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை – எதிர்வரும் 15 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்குமாறும் கல்வி அமைச்சர் பணிப்பு!

தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சகல மாணவர்களையும் உடனடியாக அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
இந்நிலையில் பரீட்சைகளை நடத்துதல், இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் என்பன தற்போது பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை கல்வியியற் கல்லூரிகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி நாளைமறுதினம் கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கல்வியியற் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், அவற்றை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் நேற்று (12) அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|