பல்கலைக்கழக கை நூல் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் விரைவில்!

Tuesday, January 10th, 2017

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருப்பதனால் 2016ம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2016 – 2017 கல்வி ஆண்டுக்காக 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் விண்ணப்பங்கள் ஜனவரி மாதம் முதல் கோரப்படுமென்று தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவிற்கு இவை கிடைக்கப் பெற்ற பின்னர், அது தொடர்பில் பத்திரிகை அறிவிப்பு இடம்பெறும். பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். புதிய கற்கை நெறிகள் பல அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அனுமதிக்கான கைநூல், கற்கை நெறிகளை தெரிவு செய்தல் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் அனைத்து பாடசாலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 300 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடராக மூன்றாவது செயலமர்வு எதிர்வரும் 11ம் 12ம் 13ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் முறை குறித்து இதன் போது தெளிவுபடுத்தப்படும். பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கைநூல் தெளிவான முறையில் அமைந்துள்ளதுடன் இணையத்தளத்தின் மூலம் இதனை தரவிறக்கம் செய்ய முடியும். இதற்காக கட்டணம் அறிவிடப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2015-2016 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் மூன்றாவது சுற்றுக்கான வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அறிவிக்கும் வகையில் இந்த வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

University-Grants-Commission-Sri-Lanka-logo_0_0

Related posts: