பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியன விடுத்துள்ள அறிவுறுத்தல் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, இன்றைய தினம் இறுதிதீர்மானத்திற்கு வரவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த 43 நாட்களாக பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரோ சேவைக்கு திரும்பாதவர்கள் பணியில் இருந்து இடைவிலகியவர்களாக கருதப்படுவார்கள் என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இருப்பினும் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணங்கியபடி தங்களது சம்பள அதிகரிப்பை வழங்கும் வரையில் போராட்டம் கைவிடப்படாது என்று பல்கலைக்கழக கல்விசாராபணியாளர்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள பேச்சு வார்த்தையின் பின்னர் இறுதி தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் குறித்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|