பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

uni Tuesday, March 13th, 2018

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் 14 ஆவது நாளாக முன்னெடுத்து வருவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

தமது போராட்டத்திற்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்க பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு முதல் ஆதரவு வழங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் கலாராஜ் தெரிவித்துள்ளார்.