பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் திகதி அறிவிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, May 18th, 2020

பாடசாலைகள் மூலம் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழக அனுமதிகளை உறுதிப்படுத்தும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில் தற்போது இந்த உறுதிப்படுத்தல்களை பாடசாலைகளின் அதிபர்களும், உப அதிபர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்வர் என்றும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது

Related posts: