பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, October 17th, 2021கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதி தலைவர், பேராசியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.
இம் முறை 44 ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இணைவதற்காக இம்முறை ஒரு இலட்சத்து ஐயாயிரத்திற்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர், பேராசியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
இலங்கைக்கு இயற்கையின் எச்சரிக்கை!
சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்த சுயாதீன மீளாய்வுக் குழு!
பாகிஸ்தான் பொதுத் தேர்தல் – நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி - இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர...
|
|