பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்!

Sunday, June 20th, 2021

பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

முன்பதாக குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் நேற்றுமுன்தினத்துடன் 18 ஆம் திகதியுடன்  நிறைவடைந்தது.

இந்நிலையில் நாட்டில் அமுலாகியுள்ள நடமாட்டத் தடையைக் கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21, 22, 23 ஆகிய திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: