பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் திங்கட்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் –  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Wednesday, February 15th, 2017

2016/2017ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான  விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

இதேவேளை உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீளத் திருத்தும் போது முன்பை விட சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில்  எந்த மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணைக்குழு தயார் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார.

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். மேன் முறையீடுகளை சமர்ப்பிப்பதன் மூலம் மாணவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

2015ஃ2016ஆம் கல்வியாண்டுகளுக்கென பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை தற்சமயம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

Related posts: