பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் மூன்றாவது தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
ஆனாலும் பல பிரதேசங்களில் மாணவர்களின் வருகை குறைந்தளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பதிவுகளை இணையம் (Online) ஊடாக மாத்திரமே மேற்கொள்ள முடியுமெனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன் 2019-2020 புதிய கல்வியாண்டிற்காக 41,500 மாணவர்கள் வரையில் உள்வாங்குவதற்கு எதிர்பாரப்பதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
24 மணிநேரத்திற்குள் அறிக்கை வேண்டும் - சுகாதார அமைச்சு !
மன்னார் ஜோசப்வாஸ் கிராம கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இறங்குதுற...
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் 2 விசேட பிரிவுகள் ஸ்தாபிப்பு!
|
|