பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
Sunday, May 28th, 2017
நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இயற்கை அனர்த்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.அனர்த்தங்களினால் மேலும் 112 பேர் காணாமல் போயுள்ளனர்.வெள்ளம், மண்சரிவு, காற்று காரணமாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 124 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 42 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.அதிலும் அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் காணப்படுகின்றது.அங்கு அனர்த்தினால் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 43 பேர் பலியானதுடன், 68 பேர் காணாமல் போயுள்ளனர்..மாத்தறை மாவட்டத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காணாமல் போயுள்ளனர்.காலி மாவட்டத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.ஹம்பாந்தோட்டையில் 5 பேர் பலியாகினர்.கம்பஹா மாவட்டத்தில் 3 பேர் பலியானதுடன், 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் இரண்டு பேர் அனர்த்தத்தினால் மரணித்துள்ளதுடன், மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, மத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களை எதிநோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதுபோல் 230 குடியிருப்புகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 701 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.24 ஆயிரத்து 603 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆயிரத்து 638 பேர் 304 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அதிலும் ரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த மாவட்டத்தில் 33 ஆயிரத்து 248 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அதுபோல் மாத்தறை மாவட்டத்தில் 31 ஆயிரத்து 419 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 21 ஆயிரத்து 918 பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை,கிங் கங்கை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் பத்தேகம பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|