பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி : பிரதமர் உறுதி!

Friday, June 29th, 2018

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார்.
இதற்காக அவர் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பலாலி செல்லவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது மற்றும் அதற்கு தேவையான காணிகள் அதனை அண்டிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக அலரி மாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய தூதுவர் தரன்ஜித் சிங்க் உடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே பலாலி விமானத்தளத்தை புனரமைத்து மக்கள் நலன் கருதியதாக அவர்களது பாவனைக்கும் வியாபாரிகளின் தேவைகளுக்குமாக பயன்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: