பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!

Tuesday, August 21st, 2018

பலாலி விமான நிலையத்தை ஆராய்வதற்காக மூன்று பேர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் குழு ஒன்று, இன்று அங்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் அமைவிடம் மற்றும் ஓடுபாதையின் நிலை குறித்து இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து தங்களது ஆய்வு அறிக்கையை இந்திய அரசாங்கத்திடம் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: