பலாலி விமானத்தளம் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி!

Friday, January 25th, 2019

யாழ்ப்பாணம் பலாலி விமானத்தளம் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன்படி இந்தியாவின் விமானத்தளங்களுக்கான சேவைகள் அங்கிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக இரண்டு பில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இதுவரையில் பலாலி விமானத்தளம் இலங்கைப்படையினரின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் யோசனை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: