பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய யாழ் மாவட்ட செயலகத்தில் கூட்டம்!
Thursday, September 5th, 2024யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றுமுன்தினம் மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சாரம், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர், விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் உதவிப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், சந்தைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|