பலாலி இராணுவ முகாமில் பயிற்சிக்கு சென்ற இளைஞன் தற்கொலை!
Thursday, January 17th, 2019யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த என்.ஜி.வை. ஆரியரட்ண (வயது 22) என்ற இளைஞனே இராணுவ முகாமில் உள்ள மரமொன்றில் நேற்று (16) மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பலாலியில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பயிற்சி முகாமில் உள்ள மரமொன்றில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் தூக்கிட்டமைக்கான காரணம் தெரியவில்லை. சடலம் தொடர்பான விசாரணைகளை பலாலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
நீர்க் கட்டணம் அதிகரிக்கும்
சுவிஸ் போதகர் ஊடாகவே யாழ்ப்பாணத்தில் 17 பேருக்கும் தொற்று - குழப்பமடைய வேண்டாம் என்கிறார் பணிப்பாளர்...
யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடனான காலநிலை - கண் நோய் பரவி வருவதால் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்க...
|
|