பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான சேதனப் பசளை உற்பத்தி முன்னெடுப்பு !

Wednesday, July 7th, 2021

2021 பெரும்போக உற்பத்திற்கான 3 ஆயிரத்து 600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, சேதன பசளையின் தேசிய உற்பத்தி உந்துதலுக்கு ஏற்ப பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி தோட்டக்கலை நிபுணர்களுடனான கலந்தாலோசனையுடன் பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான பசளை உற்பத்தியைத் இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பெரும் போகத்தில் பயன்படுத்தும் வகையில் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கான நிபுணத்துவ வழிகாட்டுதல் கோலித விக்ரமசிங்க மற்றும் ஜகத் சோமதுங்க ஆகியோரால் வழங்கப்பட்டது,

அவர்கள் திட்டம் தொடங்குவதற்கு முன்பு யாழ்ப்பாண தளபதி மற்றும் பிறருடன் சில சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் பாதுகாப்பு படை தலைமையக உறுப்பினர்கள் – தங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றதும் குடாநாட்டு விவசாய சமூகத்திற்கு சேதன பசளை பயன்பாட்டு முக்கியத்துவம் மற்றும் அத்தகைய நடைமுறைகளின் நீண்டகால விளைவுகள் குறித்து விழிப்புணர்வு அமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: