பலாலி ஆசிரியர் கலாசாலையை மீளத் திறப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்பு

Tuesday, March 8th, 2016

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பலாலி ஆசிரியர் கலாசாலையை மீளத் திறப்பதற்கு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.

இது குறித்துச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பலாலி ஆசிரியர் கலாசாலையானது யுத்த சூழ்நிலையால் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையுடன் இணைக்கப்பட்டுப் பின்னர் திருநெல்வேலியில் ஒரேயொரு பாட நெறியுடன் மிகச் சிறிய நிலப் பரப்பிலேயே இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் இன்றைய நல்லாட்சி அரசானது படையினர் வசமுள்ள பலாலி ஆசிரியர் கலாசாலையை மிக விரைவில் இயக்க முன் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: