பலாலி அன்ரனிபுரம் முன்பள்ளி மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நிதி உதவி வழங்கி வைப்பு!

பலாலி அன்ரனிபுரம் விளையாட்டுக் கழகம் மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் முதற்கட்ட கட்டுமாணப்பணிகளுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சி நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா நிதி வழங்கியுள்ளார்
நேற்றுமுன்தினம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றில் சிலவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த பகுதி சிறார்களது கற்றலுக்காக முன்பள்ளி அமைப்பதற்கும் அப்பகுதி இளைஞர்களது விளையாட்டு துறைகளை மேம்படுத்துவதற்காக விளையாட்டுக் கழகத்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இதற்கமைய இன்றையதினம் குறித்த முன்பள்ளி மற்றும் விளையாட்டு கழக நிர்வாகத்தினரிடம் தலா ஒரு இலட்சம் நிதிக்கான காசோலையை கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) மற்றும் கட்சியின் வலி.வடக்கு நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்.
Related posts:
|
|