பலாலி அன்ரனிபுரம் மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

வலிகாமம் வடக்கு பலாலி அன்ரனிபுரம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அண்மையில் மீளக்குடியேறியிருந்த நிலையில் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்த அப்பகுதி மக்கள் தமக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் வடக்கு நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
நிலையில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) தலைமையிலான பிரதிகள் குறித்த பகுதிக்கு நேரில் சென்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்து கொண்டதுடன் நிலைமைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
இதனையடுத்து குறித்த பகுதி மக்களது உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்துகொடுக்கும் வகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பணிப்பிற்கமைய கட்சியின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றையதினம் சுமார் 142 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, மா, சீனி, பருப்பு மற்றும் சோயா வீன்ஸ் ஆகிய பொருட்கள் முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்), கட்சியின் வலிகமம் வடக்கு நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு), கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் சந்திரன் (வலன்ரயன்) கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் (ஜீவா) கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் குமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்தகொண்டு குறித்த மக்களுக்கான உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.
Related posts:
|
|