பலாலியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை – தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்!

Tuesday, December 20th, 2022

யாழ்ப்பாணம் பலாலி, அந்தோணிபுரம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர் நேற்று மதியம் பலாலி – அந்தோணிபுரம் கடற்றொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அதே பகுதியில் வசிக்கும் 56 அகவையுடைவர் என தெரியவந்துள்ளது. காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினரும் பொலிசாரும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை பரீட்சையை ஒத்திவையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உயர்தர மாணவர்கள்...
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் பயணம் !