பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவை!

Wednesday, August 8th, 2018

பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதற்கான முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்தவிடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், விரைவில் இந்திய விமான சேவைகள் குழு ஒன்று பலாலிக்கு சென்று ஆய்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கான விமான சேவை நடத்தப்படுமாயின் வடக்கில் இருந்து இந்தியா செல்வோரின் செலவுகள் குறைவடைவதுடன், வடமாகாணத்துக்கான வருவாயும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம் பலாலியில் இருந்து மலேசியாவிற்கான விமான சேவையும் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts: