பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Monday, October 23rd, 2023இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் திட்டத்திற்கு இலங்கை முழுமையாக ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மதத்தினரையும் சமமாக கருதி ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
40வீத சம்பள அதிகரிப்பு பொலிஸாருக்கு கிடைக்கும்!
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது – இந்திய அரசாங்கம் கரு...
|
|