பலவீனமான நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது – பிரதமர் மஹிந்த ராஜபஷ !

Thursday, May 21st, 2020

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும். கலைக்கப்பட்ட பலவீனமான நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

தற்போது நாட்டிலேற்பட்டிருந்த கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். ஆனாலும் கடற்படைக்குள் தான் பிரச்சினை காணப்படுகின்றது. அதனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதால் பாடசாலை, பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் சிக்கல் காணப்படுகின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையிலும் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கடமையாகும்.

மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதால் பல்கலைக்கழகம், பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் தாமதம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்..

மேலும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரச, தனியார் திணைக்களங்கள் திறக்கப்பட்டு சேவை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

பொதுத்தேர்தல் தற்போது நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாறுப்பட்ட தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கலைக்கப்பட்ட பலவீனமான நாடாளுமன்றத்தை கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது என தெரிவித்துள்ள பிரதமர் இம்மாதம் 5 ஆயிரம் ரூபா நிவாரண நிதியை மக்களுக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆணைக்குவின் தீர்மானத்திற்கு மதிப்பளிப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் இம்மாத்ததிற்கு மாத்திரம் இந்த நிவாரண நிதியை வழங்க முயற்சிப்போம்எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: