பலவந்தமாக நுழைவோம் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை!

Sunday, September 24th, 2017

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதற்கு அரசுதடை விதித்தால் நாங்கள் பலவந்தமாக உள்ளே நுழைவோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களது பாடசாலைகளில் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கத் தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சுக்கு ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும்,  எனினும், அவர்கள் பாடசாலைகளுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என கல்வியமைச்சர் தெரிவித்திருந்ததால் தாங்கள் பலவந்தமாக பாடசாலைகளுக்குள் நுழையப்போவதாகவும் அச்சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கப் போராட்டங்களை பாடசாலைகளுக்குள் நடத்துவதற்கு தங்களுக்குப் பூரண உரிமை உண்டு எனவும் கல்வி அமைச்சரால் அந்த உரிமையை மறுக்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.அவ்வாறு தாங்கள் பலவந்தமாக பாடசாலைகளுக்குள் நுழைந்தால் தங்களுக்கு எதிராக வழக்குத் தொடர கல்வி அமைச்சரால் முடியாது எனவும் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: