பலத்த மழை பொழியக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, July 18th, 2019

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யகூடும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவில் மழை பெய்யகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: