பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024

தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனவே தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தேவையில்லை எனவும், பறவைக் காய்ச்சல் தொடர்பான அபாயகரமான சூழல் இல்லையென்றாலும், அது தொடர்பில் விசேடமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக இவ்வாறான நோயினால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை  இலங்கை மக்களுக்கு நாம் கூற வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் எமக்கு விசேட எச்சரிக்கையை வழங்கவில்லை. பறவைக் காய்ச்சல் வழக்குகள் இதற்கு முன்னர் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன.

ஆனால் அவை குறிப்பாக பரவலாக இல்லை. எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: