பறக்கும் விமானத்தில் பிரித்தானிய பிரஜை பரிதாமாக மரணம்!

Thursday, October 20th, 2016

டுபாயில் இருந்து இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பிரித்தானியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா விசா மூலம் இலங்கை வந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஜோன் ஸ்டுவட் பின்கல் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.650 என்ற விமானத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்காக பறந்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த பிரித்தானிய பிரஜையை விமான ஆசனத்தினுள் நீண்ட நேரம் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பமடைந்த விமான ஊழியர்கள், அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் விமான மலசலகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

emirates-plane

Related posts: