பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு புதிய நீதிவான்!

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நளினி கந்தசாமி நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதுவரை காலமும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிவானாக கடமையாற்றிய நளினி கந்தசாமி நீதிச்சேவை அணைக்குழுவினால் பருத்தித்துறை நீதிமன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் தனது கடமைகளை நேற்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். கடந்த 3 வருடங்களாக பருத்தித்துறை நீதிமன்றில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றங்கள் இருந்தாலும் நீதிவான் நீதிமன்றிற்கு எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. கடந்த வருடம் நீதிவான் நீதிமன்ற நீதிவானாக கடமையாற்றிய பெருமாள் சிவகுமார் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு விஷேட நடவடிக்கை!
கிளிநொச்சி வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி!
நாட்டில்தொடர்ந்தும் 12 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு நடைமுறையில்!
|
|