பருத்தித்துறை நவீன துறைமுகம் அமைப்பதற்காக தடைகள் நீக்கம்ரூ.58 மில். கடல்சார் சூழலியல் பூங்காவும் அமைக்கப்படும்!

Sunday, February 3rd, 2019

பருத்தித்துறையில் 11 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா செலவில் நவீன துறைமுகம் அமைக்கப்படுவதற்கு உள்ளுரில் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. மெதடிஸ்த பெண்கள் பாடசாலைச் சமூகமும் சில சந்தேகங்களை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு துறைமுகம் அமைப்பதற்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள மீன்பிடித்துறை முகத்தின் ஊடாக எதிர்காலத்தில் பாடசாலைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் வெளியிடப்பட்டது.

துறைமுகத்தை வேறு இடத்துக்கு நகர்த்துமாறு பாடசாலை நிர்வாகம் சார்பில் கோரப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி அரச தலைவர் வடக்கு கிழக்கு மாகாண  அபிவிருத்தி செயலர் வே.சிவஞானசோதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு மேற்கொண்ட நடவடிக்கை அதன் பரிந்துரைகள் தொடர்பில் கருத்த வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அவர் மேலும் தெரிவித்ததாவது:

பாடசாலை நிர்வாகம், பிரதேச சபை, மீனவர் சமூகம் ஆகிய தரப்புகளால் சில முன்மொழிவுகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த முன்மொழிவுகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த முன்மொழிவில் பாடசாலைச் சமூகம் எமுப்பிய சந்தேகம் தொடர்பில் கவனம் செலுத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பாடசாலைக்கும், துறைமுகம் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ள இடத்திற்கும் இடையில் குறுகிய இடைவெளி காணப்படுகின்றது. துறைமுகத்தை எதிர்த்திசைக்கு நகர்த்துவது நல்லது. அல்லது துறைமுகத்துக்கும் பாடசாலைக்கும் இடையில் காணப்படும் இடைவெளியை தொடர்ந்தும் பேண வேண்டும். பாடசாலைச் சமூகத்தின் இந்தக் கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.

துறைமுகத்துக்கும் பாடசாலைக்கும் இடையே காணப்படும் இடைவெளியை நிரந்தரமாகப் பேணும் வகையில் அந்தப் பிரதேசத்தில் கடல்சார் சூழலியல் பூங்கா 58 மில்லியன் ரூபாவில் அமைத்து கல்வித் தேவைக்கு கையளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: