பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை இலக்காக கொண்டு செயற்படாது மக்களின் நலன்களிலும் அக்கறை செலுத்த வேண்டும் – ஈ.பி.டி.பியின் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற உறுப்பினர் கமலதாஸ் கோரிக்கை!
Monday, December 10th, 2018இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை மட்டும் இலக்காக கொண்டு சேவையை மேற்கொள்ளாது பயணிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு சேவையாற்ற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற உறுப்பினர் கமலதாஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் பருத்தித்துறை பிரதேச செயலருக்கு இன்றையதினம் கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இதன்பின்னர் அவர் கருத்து தெரிவிக்கும் போது –
தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வீதியூடாக 751 பருத்தித்துறை வழிச்சாலை பேருந்தை சேவையில் ஈடுபடுமாறு நாம் பல கோரிக்கைகளை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் நகராட்சி மன்றத்திலும் முன்வைத்தது மட்டுமல்லாது குறித்த பேருந்து சாலையிலும் இது விடயம் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
ஆனால் சேவை நடத்தப்படும் என்று மட்டும் பதில்கிடைக்கிறதே தவிர சேவையை வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காணமுடியாதுள்ளது.
இலங்கையில் புகழ்பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தை தரிசிப்பதற்காக நாளாந்தம் பலநூறு பக்தர்கள் அவ்வாலய பகுதிக்கு வருவது வழமை. ஆனாலும் இதர நாட்களை தவிர வெள்ளிக் கிழமைகளில் மட்டும் அங்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுவதால் அதிகளவான மக்கள் அன்றையதினம் வருகை தருகின்றனர்.
அத்துடன் சந்நிதி ஆலயபகுதி ஊடாக வல்வை வீதியை சென்றடையும் மார்க்கத்தில் பல பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் இச்சேவையின் தடையால் பாதிக்கப்படுகின்றனர்.
குறித்த 751 இலக்க வழிச்சாலை பேருந்து பிரதான வழியூடாக நாளாந்தம் சேவையில் தற்போது ஈடுபடும் நிலையில் கடந்த காலங்களில் சந்நிதி ஆலய வீதியை சென்று பின்னர் பிரதான விதியூடாகவே தமது சேவையை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது பேருந்து சாரதிகள் குறித்த வழி பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் ஆலய வீதியூடாக மேற்கொள்வதில்லை.
இதனால் நாளாந்தம் பல பயணிகள் மட்டுமல்லாது பக்த அடியார்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலைமையை மாற்றி நாளாந்தம் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிவரும் குறித்த பேருந்து சேவையை மக்களின் நலன்கருதி செல்வச்சந்நிதி ஆலய வீதிக்கு வந்து செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|