பருத்தித்துறை சாலைக்கு 4 புதிய இ.போ.ச பஸ்கள்!

Wednesday, December 14th, 2016

பருத்தித்துறை போக்குவரத்துச் சாலைக்கு 4 பேருந்துகளை வழங்குவதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்குக்குப் பயணம் மேற்கொண்ட ரமால் சிறிவர்த்தன நேற்று முன்தினம் பருத்தித்துறைச் சாலைக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பருத்தித்துறைப் போக்குவரத்துச் சாலையைப் பார்வையிட்ட அவர் உழியர்களுடனும் கலந்துரையாடினார். பருத்தித்துறை முகாமையாளரின் வேண்டுகோளுக்கமைய 2017ஆம் ஆண்டு அரச திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற 1000 பேருந்தகளில் 4 பேருந்துகள் பருத்தித்தறைச் சாலைக்கு வழங்கப்படும். ஏற்கனவே பழுதாகியுள்ள பேருந்துகளுக்கெனப் புதிய 4 இயந்திரங்கள் பெற்றுத்தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ee9b37a543af30509248a26f2de04a60_XL

Related posts: