பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை – அச்சத்தில் மீனவர்கள்!

Thursday, December 1st, 2016

பருத்தித்துறை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் அந்தோனிமுத்து வயது 54 மற்றும் அன்ரன் ஜெயக்குமார் அஜித்குமார் வயது 16 ஆகிய இரு மீனவர்களே இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை குறித்த கடற்பரப்பில் கடற்றொழிலுக்காக சென்ற மூன்று படகுகளில் இரண்டு படகுகள் நாடா புயல் காரணமாக அடித்தச்செல்லப்பட்டிரந்த நிலையில் ஒரு படகு தாளையடியிலும் மற்றொன்று செம்பியன் பற்று கடற்பகுதியிலும் கரை ஒதுங்கிய நிலையில் மூன்றாவது படகான குறித்த இரு மீனவர்களும் சென்ற படகு இதுவரை கரை ஒதுங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே நாடா புயல் காரணமாக இந்தியாவின் இராமேஸ்வரம் கோடிக்கரையை சேர்ந்த மீனவர் படகொன்று ஐந்து மீனவர்களுடன் அலையில் அடித்துவரப்பட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை இந்திய துணைத்தூதுவரிடம் கையளிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

1475-2-2259e74925f4687de0a8f8d6e96be45e