பருத்தித்துறை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!

Tuesday, February 14th, 2017

அண்மையில் தமிழகம் எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடலின் நீரோட்டத்தால் எண்ணூர், பெசன்ட் நகர், மெரினா, திருவான்மியூர் வரையிலும் எண்ணெய் பரவியது. எனினும், குறித்த விபத்தின் போது ஏற்பட்ட எண்ணெய் கசிவு தற்போது இலங்கையில் வடக்கு பகுதி கடற்பரப்பிலும் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பகுதியில் சில கடலாமைகள் உயிரிழந்த நிலையில், கரை ஒதுங்குகின்றமையினால் இவ்வாறு சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வழமைக்கு மாறாக குறித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் கடலாமைகள் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என வட பகுதி மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதேவேளை, கடலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா..? அல்லது, வேறு காரணங்களுக்கான ஆமைகள் உயிரிழந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அந்த அமைப்புகள் கோரியுள்ளன.

sea-Signal-690x450

Related posts: