பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மூன்று தள கட்டடத் தொகுதி திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எம்.ஜே.எப் அறக்கட்டளை நிதியம் மற்றும் இயன் மற்றும் பர்பராகரன் நிதியத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று தள பெண் நோயாளர் விடுதிக் கட்டடத் தொகுதி திறந்துவைக்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் எம்.ஜே.எப் அறக்கட்டளை நிதிய அறங்காவலர்களான டில்கான் பெர்னான்டோ, கே.ஆர்.ரவீந்திரன், ராஜன் ஆசீர்வாதம் மற்றும் இயன் பர்பராகரன் நிதிய ஸ்தாபகர் இயன்.கே.கரன் ஆகியோரால் புதிய கட்டடத்தொகுதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
124 மில்லியன் ரூபா செலவில் பெண்கள் உளநல சிகிச்சை விடுதி, பெண்கள் மருத்துவ விடுதி, பெண்கள் சத்திரசிகிச்சை விடுதி என 100 படுக்கை வசதிகளை கொண்டதாக இந்த கட்டடத் தொகுதி காணப்படுகிறது.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.மோகநாதன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் கமலநாதன், வைத்திய அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|