பருத்தித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்த மூன்று படகுகளில் சென்ற நபர்களால் தாக்கப்பட்டதாக தெரிவிப்பு!

Thursday, October 22nd, 2020

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவர் வெளிமாவட்டத்தை சேர்ந் மூன்று படகுகளில் சென்ற நபர்களால் எட்டு மணி நேரம் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பருதித்தித்துறை எரிஞ்சம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த மயிலிட்டி மீனவர் சமாசத்தினைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் நேற்று மாலை மீன்பிடிப்பதற்காக படகில் சென்றதாகவும், நாகர்கோவில் கடற்பரப்பில் மாலை 6.30 மணியளவில் 40 கோஸ் பவர், சுசுக்கி இயந்திரம் பொருத்தப்பட்ட மூன்று படகுகளில் சென்ற நபகர்கள் பருதித்துறை மீனவர்கள் பயணித்த படகினை சுற்றிவளைத்ததுடன் அவர்களின் படகினை தமது படகுடன் இணைத்து கட்டி வைத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் மின்னவர்கள் கொண்டு சென்ற ஹெல்மெட்களால் கடுமையாகத் தாக்கியதாகவும், தாக்கும் போது கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீங்கள் தானே செயற்பட்டுவருகின்றீர்கள் என்று கேட்டு கேட்டுத் தாக்கியதாகவும் அதிகாலை 2.30 மணிக்குப் பின்னரே தம்மை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: