பருத்தித்துறையின் அபிவிருத்தி பின்தங்கியமைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினரே – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

பருத்தித்துறை நகரசபையை தமது ஆளுகைக்குள் வைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது ஆழுமையின்மை காரணமாகத்தான் இப்பிரதேசம் இன்று அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தும்பளை மேற்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாடில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
மக்களின் குறைகளை இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி அவற்றுக்கு சரியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பவர்களே மக்களின் சேவகனாக மட்டுமன்றி சிறந்த அரசியல் தலைவராகவும் இருக்கமுடியும். அந்தவகையில்தான் நாம் கடந்தகாலங்களில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமைத்துவத்துடன் கூடியதான வழிகாட்டலுடன் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதேசத்தின் அபிவிருத்திகளையும் முன்னெடுத்துள்ளோம்.
துரதிஷ்டவசமாக மக்கள் உணர்ச்சிப் பேச்சுக்களாலும் ஊசுப்பெற்றுதல்களாலும் ஈர்க்கப்பட்ட கூட்டமைப்பினருக்கு வாக்ளித்து அவர்களை வெற்றிபெறச் செய்தனர். ஆனால் வாக்குறுதிகளால் மக்களின் வாக்குகளை அபகரித்த கூட்டமைப்பினர் தமக்குக்கிடைக்கப்பெற்ற பிரதேச நகர சபைகளின் கீழான அபிவிருத்திகளை சரியான வகையில் முன்னெடுக்கவில்லை.
ஆதேபோன்றுதான் வடக்கு மாகாணசபையை கூட்டமைப்பினர் வெற்றிகொண்டிருந்தாலும் அவர்களது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் உழல் மோசடிகள் காரணமாக இன்று சிதைவடைந்தது மட்டுமன்றி அவர்களை தமது வாக்குகளால் வெற்றிபெறச் செய்த மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எனவே எதிர்காலங்களில் மக்களுடன் நின்று மக்களுக்காக உழைக்கும் அரசியல்வாதிகள் யார் என்பதை இனங்கண்டு மக்கள் வாக்களிப்பது மட்டுமன்றி பிரதேசத்தின் அபிவிருத்தி மட்டுமன்றி வாழ்க்கையையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் ரட்ணகுமார், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
|
|